தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

கண்டெய்னர் லாரியில் 200 மூட்டைகளில் பான் மசாலா பறிமுதல்! - சட்டவிரோத குட்கா விற்பனை

ராயக்கோட்டை அருகே ரூ. 30 லட்சம் மதிப்பில் 200 மூட்டைகளில் பான் மசாலாவை பறிமுதல் செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

pan masala recovered from container lorry
கண்டெய்னர் லாரியில் பறிமுதல் செய்யப்பட்ட பான் மசாலா

By

Published : Sep 30, 2020, 6:56 PM IST

கிருஷ்ணகிரி: ராயக்கோட்டை அருகே ரூ.30 லட்சம் மதிப்பில் 200 மூட்டைகளில் பான் மசாலாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

ராயக்கோட்டை அருகே உள்ள கோனேரி அக்ரஹாரம் கிராமத்தில் கேட்பாரற்று கண்டெய்னர் லாரி நிற்பதாக, காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர் கண்டெய்னர் லாரியை திறந்து பார்த்தபோது, 25 கிலோ எடை கொண்ட 200 மூட்டைகளில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா பொருள்கள் இருப்பது தெரியவந்தது.

இதன் மதிப்பு ரூபாய் 30 லட்சம் ஆகும். இதையடுத்து லாரியுடன் பான் மசாலா பொருள்களை பறிமுதல் செய்த காவல்துறையினர், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கோழி திருடியதாக கூறி அண்ணனை கொலை செய்த தம்பி!

ABOUT THE AUTHOR

...view details