தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

வீட்டில் வைத்திருந்த ரூ.3.75 லட்சம் மதிப்பு வைர நகை மாயம் - பெண் புகார் - வைர நகைகள் மாயம்

சென்னை: வீட்டின் அறையில் வைத்திருந்த ரூ.3.75 லட்சம் மதிப்பிலான வைர நகைகள் காணாமல் போனதாக பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Rs. 3.75 lakh worth diamond jewel missing and lady complaint to police
வைர நகை மாயம்

By

Published : Sep 9, 2020, 2:43 PM IST

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் ஸ்ரீனிவாசா அவென்யூ பகுதியில் வசித்து வருபவர் கணேஷ் நடராஜ். இவரது மகள் ரேவதி(34).

கடந்த 29ஆம் தேதி ரேவதி வெளியே சென்று விட்டு வந்து, தான் அணிந்திருந்த வைர நகைகளை கழட்டி வீட்டிலுள்ள தனது அறையில் வைத்துள்ளார்.

பின்னர் அறையில் வைத்திருந்த வைர நகையை கடந்த 30ஆம் தேதி ரேவதி பார்த்தபோது, வைக்கப்பட்ட இடத்தில் நகை இல்லாமல் போயுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வீடு முழுவதும் நகையை தேடி பார்த்துள்ளார். ஆனால் எங்கு தேடியும் நகை கிடைக்காததால் அபிராமபுரம் காவல் நிலையத்தில் வந்து ரூ. 3.75 லட்சம் மதிப்பிலான வைர நகைகள் காணாமல் போயுள்ளதாக புகார் அளித்துள்ளார்.

மேலும் கடந்த 30ஆம் தேதி காலை தனது அறையை சுத்தம் செய்ய வந்த பணிப்பெண் கோமதி மீது சந்தேகம் இருப்பதாக புகாரில் தெரிவித்துள்ளார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details