தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

பெண் காவலரிடம் அத்துமீறல் - ரவுடி கைது - ரவுடி

சென்னை: விசாரணைக்காக வந்து காவல் நிலையத்திற்குள் பெண் காவலரிடம் ரவுடி ஒருவர் தவறாக நடக்க முயற்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

raja
raja

By

Published : Sep 26, 2020, 9:23 AM IST

மீனம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ரவுடி லொள்ளு ராஜா (32). இவர் நேற்று ஆட்டோ ஓட்டுநர் ஒருவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து ஆட்டோ ஓட்டுநர் அளித்த புகாரின்பேரில், மீனம்பாக்கம் காவல் துறையினர், ரவுடி லொள்ளு ராஜாவை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

அப்போது கஞ்சா போதையில் இருந்த லொள்ளு ராஜா, அங்கிருந்த பெண் காவலர் ஒருவரிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். உடனே மற்ற காவலர்கள் அவரைப் பிடித்து இழுத்துச் சென்றனர். இதையடுத்து பெண் காவலரிடம் தவறாக நடக்க முயற்சித்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்ட லொள்ளு ராஜாவை காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.

இவர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதாகவும், ஏற்கனவே பலமுறை குற்றச்செயல்களில் ஈடுபட்டு சிறைக்கு சென்றுவந்தது தெரியவந்துள்ளது. வேறு ஒரு குற்றத்திற்காக விசாரணைக்கு வந்த காவல் நிலையத்திற்குள்ளேயே, பெண் காவலரிடம் ரவுடி ஒருவர் தவறாக நடக்க முயற்சித்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: இரண்டு வருடங்களாக தேடப்பட்டவரை சுற்று வளைத்து கைது செய்த காவலர்கள்...!

ABOUT THE AUTHOR

...view details