சென்னை கிழக்கு தாம்பரம் அடுத்த இரும்புலியூர் ஜிஎஸ்டி சாலையில் ராஜேஷ்(35) என்பவர் செல்போன் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன் தினம் (நவ. 3) இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். இதையடுத்து நேற்று (நவ. 4) காலை கடையை திறந்து பார்த்தபோது, மேற்கூரையில் துளையிட்டு கடையில் விற்பனைக்காக வைத்திருந்த 35 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பழைய செல்போன்கள் மற்றும் செல்போன் புதிய உதிரிபாகங்கள் ஆகியவை அடையாளம் தெரியாத நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
செல்போன் கடையில் எதிரே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பாலாஜி(55) என்பவர் இரவு குடும்பத்துடன் தூங்கி கொண்டிருக்கும்போது, அவர் வீட்டில் நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போன், 2 ஆயிரம் ரூபாய் ரொக்க பணமும், அதே பகுதியில் உள்ள வெங்கடேஷ் என்பவர் வீட்டில் 8 கோழி, 5 புறாவையும் கொள்ளையடித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து அதே பகுதியைச் சேர்ந்த கீரை வியாபாரி, தனது தள்ளு வண்டியில் வைத்திருந்த 5000 ரூபாய் பணமும் திருடுபோயுள்ளது. ஒரே இரவில் அடுத்தடுத்து நான்கு இடங்கிளில் கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், காவல் துறையினர் வழக்குப்ப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.