கோயம்புத்தூர்: சாலையில் நடந்து சென்ற சிறுவனிடம் அடையாளம் தெரியாத நபர்கள் செல்போன் பறித்துசெல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
கரும்புக்கடை பகுதியை சேர்ந்த இர்சாத் என்ற சிறுவன், ஆத்துப்பாலம் சுங்கச்சாவடி அருகே கடந்த 23 ஆம் தேதி இரவு வீட்டிற்கு நடந்து சென்றுள்ளான்.
அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சாலையில் சென்ற சிறுவனிடம் செல்போனை கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்து சென்றனர்.
செல்போனை திருடிய திருடர்கள்
இந்தச் சம்பவம் தொடர்பாக குனியமுத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
அப்போது சிறுவனிடம் செல்போனை பறித்துச் சென்ற அடையாளம் தெரியாத நபர்களின் உருவம், சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருப்பது தெரியவந்தது.
அதனைக் கைப்பற்றி, அதில் பதிவான நபர்களை காவலர்கள் தீவிரமாக தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: காதல் திருமணம் செய்துகொண்ட இளைஞர் விஷம் அருந்தி தற்கொலை!