திருச்சியை சேர்ந்தவர் ஆர்.கே.ராஜா என்கிற பத்மநாபன், நடிகர் விஜய் ரசிகர் மன்ற திருச்சி மாவட்டத் தலைவராக பதவி வகித்த இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அன்மையில் நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தொடங்கிய அரசியல் கட்சியின் மாநிலத் தலைவராக ஆர்.கே.ராஜா நியமிக்கப்பட்டார். பின்னர் அக்கட்சிக்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்று நடிகர் விஜய் அறிவித்ததைத் தொடர்ந்து, ஆர்.கே.ராஜா பதவியை ராஜினாமா செய்தார்.
ஆர்.கே.ராஜா மீது ஏற்கனவே திருச்சி மாநகர குற்றப்பிரிவில் நிலத்தகராறு தொடர்பாக புகார் இருந்தது. சுந்தரவேல் என்பவர் கொடுத்தொருந்த அப்புகாரின் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இதனால் ஆர்.கே.ராஜா தலைமறைவானார். அவர் எங்கே இருக்கிறார் என்பது குறித்து அவரது குடும்பத்தினரிடம் தொடர்ந்து காவல்துறையினர் விசாரித்து வந்தனர்.