திருவள்ளூர்: மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் ரியல் எஸ்டேட் அதிபர் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பீதியைக் கிளப்பியுள்ளது.
திருவொற்றியூரைச் சேர்ந்த சரவணன் என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவந்தார். இவர், பணி நிமித்தமாக இருசக்கர வாகனத்தில் பொன்னேரி நோக்கி சென்று கொண்டிருந்தார். இலவம்பேடு அருகே வந்தபோது, காரில் வந்த 8 பேர் கொண்ட கும்பல், சரவணனை வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றது.
இதில் ரத்த வெள்ளத்தில் சாலையில் துடிதுடித்த சரவணனை மீட்ட பொதுமக்கள், அவசர ஊர்தி மூலம் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சரவணன் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
வெட்டி கொலைசெய்யப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர் இதுகுறித்து பொன்னேரி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். தொழில் போட்டி காரணமாக இந்த கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.