கோவை மாவட்ட வழங்கல் அலுவலர் குமரேசன் உத்தரவின் பேரில் பறக்கும்படை தாசில்தார் சிவகுமார் தலைமையில் பூ மார்க்கெட் பகுதியில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது தெப்பகுளம் பகுதியில் சென்ற ஆட்டோவில் 225 கிலோ ரேசன் அரிசியை 9 மூட்டைகளில் எடுத்து செல்வதாக தகவல் வந்தது. இதனையடுத்து அந்த ஆட்டோவைப் பிடிக்க பறக்கும் படையினர் தெப்பகுளம் பகுதிக்கு விரைந்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசி மூட்டைகள் அங்கு அன்சுருதீன் என்பவர் ஆட்டோவில் கடத்திச்சென்ற ரேஷன் அரிசியை பறக்கும் படையினர் கைப்பற்றினர். ஆனால் ஓட்டுநர் அன்சுருதீன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடத்தலுக்கு பயன்படுத்திய ஆட்டோ கோவையில் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இப்படி பிடிபட்ட அரிசி மூட்டைகள் பெரும்பாலும் கேரளாவிற்கு எடுத்து செல்லப்படுகின்றது. அங்கு ரேசன் அரிசி கிலோ 10 ரூபாய்க்கு விற்கபடுவதாக தகவல்.