தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

விளையாடிவிட்டு வீடு திரும்பிய ரயில் ஊழியர்; லாரி மோதி உயிரிழந்த சோகம்! - perambalur accident

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலையில், இருச்சக்கர வாகனத்தின் மீது லாரி மோதி விபத்து ஏற்படுத்தியதில் ரயில்வே ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

railway staff killed in lorry accident
railway staff killed in lorry accident

By

Published : Dec 13, 2020, 5:21 PM IST

பெரம்பலூர்: ரயில்வே ஊழியர் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் நேரு நகரைச் சேர்ந்தவர் விஜயன். இவர் அரியலூர் மாவட்டத்தில் ரயில்வேயில் வேலை செய்து வருகிறார். இவர் இன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள விளையாட்டு மைதானத்திற்கு சென்று, பின் தனது இருச்சக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார்.

அப்போது, பின்னால் வந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே விஜயன் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பெரம்பலூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, உயிரிழந்த விஜயனின் உடலை உடற்கூராய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details