தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

வீட்டிற்கு வெளியே இருந்த இளைஞருக்கு கத்திகுத்து! - காஞ்சிபுரம் குற்றம்

காஞ்சிபுரம் அருகே கூரம் பகுதியில் வீட்டிற்கு வெளியே உட்கார்ந்திருந்த தனியார் பள்ளி ஓட்டுநரை பட்டா கத்தியால் சரமாரியாக குத்தி கிழித்துவிட்டு, தப்பிசென்ற அதே பகுதியைச் சேர்ந்த இளைஞரை பாலுசெட்டி காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

pvt school driver assaulted in kanchipuram
pvt school driver assaulted in kanchipuram

By

Published : Dec 20, 2020, 10:50 AM IST

காஞ்சிபுரம்:தனியார் பள்ளி ஓட்டுநரை சரமாரியாக கத்தியால் தாக்கி விட்டுச் தப்பிசென்ற இளைஞரைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

காஞ்சிபுரம் அருகேவுள்ள கூரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபுதேவா(30). இவர் தனியார் பள்ளி வாகன ஓட்டுநராக வேலை செய்துவருகிறார். தனது வீட்டின் வெளியே பிரபுதேவா உட்கார்ந்திருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த குல்பி (எ) கிருஷ்ணமூர்த்தி என்ற இளைஞர், “வீட்டிற்கு வந்து உன்னை வெட்டுகிறேன் பார்” என்று மிரட்டி விட்டுச் சென்றுள்ளார்.

பின்னர் சுமார் 2 மணி நேரம் கழித்து இரண்டு பேருடன் வந்த குல்பி, பிரபுதேவாவை சரமாரியாக தான் கொண்டு வந்த பட்டா கத்தியால் தாக்கியுள்ளார். இதில் தலைப்பகுதி, முகத்தில் பலத்த வெட்டு காயமடைந்து, அவசர ஊர்தி மூலம் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு, அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரை சென்னை அரசு மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அனுப்பிவைத்தனர். இதுகுறித்து பாலுசெட்டி சத்திரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, இளைஞரையும், அவருடன் வந்த இருவரையும் தேடி வருகின்றனர்.

மேலும் முன் விரோதம் காரணமாக இந்த கொலைவெறி தாக்குதல் நிகழ்த்தப்பட்டதா என்ற கோணத்திலும் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details