தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

கோபத்தில் வீட்டைவிட்டு வெளியேறிய பிரபல பாடகரின் மகள் - காணமால் போன புஷ்பவனம் குப்புசாமியின் மகள்

சென்னை: பிரபல நாட்டுப்புற பாடகர் புஷ்பவனம் குப்புசாமியின் மகள் காணமல் போனதாக காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

missing
missing

By

Published : Dec 16, 2019, 6:31 PM IST

சென்னை: பிரபல நாட்டுப்புற பாடகர் புஷ்பவனம் குப்புசாமியின் மகள் காணாமல்போனாதாக காவல் துறையில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் விஸ்வநாதன் தெருவில் பிரபல நாட்டுப்புற பாடகரும் திரைப்பட பாடகருமான புஷ்பவனம் குப்புசாமி தனது மனைவி அனிதாவுடன் வசித்துவருகிறார். இவர்களது மகள் பல்லவி. இவர் மருத்துவம் படித்துள்ளார்.

புஷ்பவனம் குப்புசாமியின் மகள் பல்லவி

புஷ்பவனம் குப்புசாமியின் உறவினர் கவுசிக் என்பவர் அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் ஒன்று கொடுத்துள்ளார். அதில், புஷ்பவனம் குப்புசாமியின் மகள் பல்லவி திடீரென காணாமல் போய்விட்டார். அனிதாவுக்கும் பல்லவிக்கும் நேற்றிரவு சண்டை நடந்துள்ளது. அதனால் பல்லவி கோபத்தில் காரை எடுத்துச் சென்றுள்ளார். இதுவரை வீடு திரும்பவில்லை.

பல்லவி எங்கு சென்றார் என்றும் தெரியவில்லை. எனவே காவல் துறையினர் அவரை கண்டுபிடித்து தர வேண்டும் என அதில் தெரிவித்திருந்தார். இதனையடுத்து,காவல் துறையினர் பல்லவியை தற்போது தேடிவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details