மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் புனே மாவட்டத்தில் பிம்ப்ரி சிஞ்ச்வாத் என்ற பகுதியில் 26 வயது கொண்ட விமான பயணி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தற்காக 28 வயது கொண்ட இளைஞர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த நபருக்கு எதிராக புனேவின் வகாட் காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எஃப்.ஐ.ஆர் தகவலின்படி, ஆன்லைன் டேட்டிங் செயலி மூலம் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் நேரில் சந்திக்க முடிவு செய்து இரவு உணவிற்காக இருவரும் வெளியே சென்றுள்ளனர். அப்போது அந்த பெண்னை மது அருந்தும்படி இளைஞர் கட்டாயப்படுத்தியுள்ளார்.