புனேவின் பிம்ப்ரி-சின்ச்வாட் பகுதியில் முகக் கவசம் அணியாமல் காரில் உள்ளே அமர்ந்திருந்தவரை நிறுத்த முயன்ற போக்குவரத்துக் காவலரை, அந்த காரின் முன்புறம் வைத்து இழுத்துச் சென்ற ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். அதுசமயம் காரின் முன்பக்கம் காவலர் தொங்கிக் கொண்டிருப்பதை அருகே சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள் கண்டுள்ளனர். பின்னர், அந்தக் காரை துரத்திப் பிடித்து தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து சின்ச்வாட் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள புகாரின் படி, போக்குவரத்துக் காவலர் முகக்கவசம் அணியாதவர்களைக் கண்காணிக்கும் பணியில் இருந்துள்ளார். அப்போது குற்றம்சாட்டப்பட்டவர் முகக்கவசம் அணியாமல் வந்துள்ளார். அப்போது அவரை தடுத்து நிறுத்தும்போது காரின் முன்பக்கம் வைத்து இழுத்துச் சென்றுள்ளார்.