தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

பாண்டிச்சேரியிலிருந்து சாராயம் கடத்தல்: டிரைவர் கைது! - puducherry liquor news in Tamil

கடலூர்: பாண்டிச்சேரியிலிருந்து கடலூர் வழியாக நாகப்பட்டினத்திற்கு சாராயம் கடத்த முயன்ற மினிவேனை பறிமுதல் செய்த காவல் துறையினர், டிரைவரை கைது செய்தனர்.

பாண்டிச்சேரியிலிருந்து சாராயம் கடத்தல்: டிரைவர் கைது!
பாண்டிச்சேரியிலிருந்து சாராயம் கடத்தல்: டிரைவர் கைது!

By

Published : Jan 8, 2021, 3:16 PM IST

பாண்டிச்சேரியிலிருந்து நாகப்பட்டினத்திற்கு மினி லாரியில் சாராயம் கடத்தப்படுவதாக வந்த ரகசிய தகவலையடுத்து, மத்திய புலனாய்வு காவல் துறையினர் சிதம்பரம் அருகே உள்ள பி. முட்லூர் எம்ஜிஆர் சிலை அருகே வாகனத்தை மடக்கினர்.

அப்போது அதில் இருந்த டிரைவர் வாகனத்தை விட்டு தப்பி ஓடினார். பின்னர் காவல் துறையினர் அந்த வாகனத்தை சோதனை செய்தபோது, வாகனத்தில் 20 கேன்களில் 35 லிட்டர் வீதம் 700 லிட்டர் சாராயம் மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. பின்னர் வாகனத்தையும், சாராயத்தையும் கைப்பற்றிய காவல் துறையினர், சிதம்பரம் மதுவிலக்கு காவல் துறையில் ஒப்படைத்தனர்.

இதனைத் தொடர்ந்து மதுவிலக்கு காவல் துறையினர் தப்பி ஓடிய டிரைவரை புதுச்சேரிக்குசென்று கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், டிரைவர் பாண்டிச்சேரியைச் சேர்ந்த செல்வம் என்பவரது மகன் ராஜவேல் என்பது தெரியவந்தது. மேலும் இந்த மினி வாகனத்தில் பாண்டிச்சேரியிலிருந்து நாகப்பட்டினத்திற்கு தொடர்ச்சியாக சாராயம் கடத்த வாகனத்தில் மறைவான ரகசிய அறை ஏற்படுத்தப்பட்டு அதில் கேன்களை வைத்து யாருக்கும் தெரியாமல் காலியாக இருக்கும் வாகனம் போல் செட்டப் செய்து சாராயத்தை கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையும் படிங்க...பறவை காய்ச்சல் எதிரொலி: கடும் சரிவை சந்திக்கும் கறிக்கோழி விற்பனை!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details