புதுச்சேரி வாணரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி சாணிகுமார். இவரை நேற்று காலை வெடிகுண்டு வீசியும் அரிவாளால் சரமாரியாக வெட்டியும் அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று படுகொலை செய்தது.
புதுச்சேரி ரவுடி சாணிகுமார் கொலை வழக்கு - 8 பேர் கைது - 8 arrested
புதுச்சேரி: பிரபல ரவுடி சாணிகுமார் கொலை வழக்கில் எட்டு பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்த காவல் துறையினர் இதில் தொடர்புடைய குமரன், சதீஷ், சந்திரன், ரெனோ உள்ளிட்ட எட்டு பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள், செல்ஃபோன்கள் இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவற்றையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
ரவுடி சாணிகுமார் கொலை முன்விரோதம் காரணமாக நடந்துள்ளதாகவும், குற்றவாளிகள் 24 மணி நேரத்திற்குள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் புதுச்சேரி காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.