தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

மதுக்கடை ஊழியர்களை தாக்கி பணம் பறிப்பு: 3 இளைஞர்களுக்கு வலைவீச்சு! - crime news

புதுச்சேரி: மதுக்கடை ஊழியர்களை தாக்கி, ரூபாய் 60 ஆயிரம் பணத்தை கத்திமுனையில் கொள்ளையடித்த மூன்று இளைஞர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

மதுக்கடை ஊழியர்களை தாக்கி பணம் பறிப்பு: 3 இளைஞர்களுக்கு வலைவீச்சு!
மதுக்கடை ஊழியர்களை தாக்கி பணம் பறிப்பு: 3 இளைஞர்களுக்கு வலைவீச்சு!

By

Published : Jan 5, 2021, 10:35 AM IST

கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த கனகசபை, புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் மதுக்கடையில் கணக்காளராக பணிபுரிந்து வருகிறார்.

இந்தக் கடையில் நேற்றிரவு மூன்று இளைஞர்கள் மது வாங்கியுள்ளனர். அதற்கான பணத்தை கேட்டபோது எங்களிடம் பணம் கேட்கிறாயா எனக் கேட்டு மிரட்டலாக பேசியுள்ளனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து மது கடைக்குள் புகுந்து அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கணக்காளர் கனகசபையின் தலை, கை உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டினர்.

அவர்களை தடுக்க வந்த மதுக்கடை ஊழியர் ராஜதுரை என்பவரையும் வெட்டினர். அப்போது அங்கு மது வாங்க வந்தவர்கள் கடை ஊழியர்களை ஒரு கும்பல் கத்தியால் வெட்டுவதை பார்த்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

இதற்கிடையே அக்கும்பல் கடைக்குள் நுழைந்து கல்லாவில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடியது. கத்தியால் வெட்டப்பட்டு படுகாயமடைந்த கணக்காளர் கனகசபை, ஊழியர் ராஜதுரை ஆகியோரை ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த வந்த ரெட்டியார்பாளையம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுக்கடை ஊழியர்களை தாக்கி ரூபாய் 60ஆயிரம் பணம் பறித்து சென்ற மூன்று இளைஞர்களை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க...ஆன்லைனில் வேலை தேடுபவர்களை ஏமாற்றிய கும்பல் கைது!

ABOUT THE AUTHOR

...view details