மதுரை மாநகர குற்றப்புலனாய்வு பிரிவில் காவலராக வேலை பார்த்து வந்தவர் விஜயகுமார் (வயது 42). இவருக்கு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று மதுரை ஆயுதப்படை மைதானத்தில் உள்ள வெடிகுண்டு தடுப்பு பிரிவு அலுவலகத்தில் பணியில் இருந்த விஜயகுமார், நள்ளிரவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விஜயகுமார் எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்பது குறித்து தல்லாகுளம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது உடல் உடற்கூறாய்வுக்காக மதுரை அரசு இராசாசி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
காவலர் தூக்கிட்டு தற்கொலை இறந்துபோன விஜயகுமார் மதுரை ஆயுதப்படை மைதானத்தில் மோப்ப நாய்கள் பிரிவில் காவலராக வேலை பார்த்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: முழு ஊரடங்கின்போது 5 மாநகராட்சிகளில் எவை இயங்கும்? எவை இயங்காது? - அரசு வெளியீடு