தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

நீட் தேர்வு மோசடி விவகாரம் - இடைத்தரகரை தேடும் போலீஸ்! - மாணவி தீக்சா

நீட் போலி மதிப்பெண் சான்றிதழ் விவகாரத்தில், மாணவி தீக்சாவின் தந்தை பாலசந்தர் விசாரணையில் தெரிவித்த தகவலின் அடிப்படையில், இடைத்தரகரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

neet scam
neet scam

By

Published : Jan 4, 2021, 2:58 PM IST

சென்னை: நீட் மதிப்பெண் முறைகேடு புகாரில் மாணவி தீக்சா, அவரது தந்தை பாலசந்தர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஜனவரி ஒன்றாம் தேதி பாலசந்தர் பெரியமேடு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் நடத்திய விசாரணையில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த இடைத்தரகராக அறிமுகமாகிய ஜெயராம் என்பவர் ரூ.25 ஆயிரம் பணம் பெற்றுக்கொண்டு இரண்டு மாணவிகளின் விவரங்கள், மதிப்பெண்களை இணைத்து போலி மதிப்பெண் சான்றிதழை தயார் செய்தது தெரியவந்தது.

போலி மதிப்பெண் சான்றிதழ் விவகாரம்! - மாணவி, தந்தை பாஸ்போர்ட்டை முடக்க திட்டம்!

தீக்சா நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றதால், அவரது தந்தை பாலச்சந்தர் கொடுத்த அழுத்தத்தால் தீக்சா கடும் மன உளைச்சளுக்கு உள்ளாகியுள்ளார். அதன் பின்பே இடைத்தரகரகராக அறிமுகமாகிய ஜெயராமிடம் பணம் கொடுத்து போலி மதிப்பெண் மோசடியில் பாலசந்தர் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

ஜெயராம், மாணவி தீக்சாவுக்கு போலி மதிப்பெண் சான்றிதழ் உருவாக்கி கொடுத்தது போல, வேறு யாருக்கேனும் கொடுத்துள்ளாரா என காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details