தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பல்வேறு இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் முறையான ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை எழும்பூரில் உள்ள லட்சுமி லாட்ஜில் கள்ளநோட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
ரூ.50 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் பறிமுதல்! - ரூ.50 லட்சம்
சென்னை: எழும்பூரில் உள்ள தனியார் உணவகம் ஒன்றில் சோதனை நடத்திய போலீசார், ரூ.50 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகளை வைத்திருந்த நபரை கைது செய்து அவரிடமிருந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.
இந்த தகவலையடுத்து, தலைமை செயலக குடியிருப்பு காவல்நிலைய ஆய்வாளர் ராஜேஸ்வரி தலைமையிலான தனிப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். விடுதியில் ஆய்வு மேற்கொண்ட போலீசார், நபர் ஒருவர் கள்ள நோட்டுகளை பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இதனைத்தொடர்ந்து சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கள்ளநோட்டுகளை வைத்திருந்த நபரை மடக்கிப்பிடித்த போலீசார், அவனை கைது செய்து கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்தனர். இதனைதொடர்ந்து கைது செய்யப்பட்ட அந்த நபரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.