புகழேந்தியின் நண்பரான ராஜேந்திரன் அளித்த வாக்குமூலத்தில், அவரும் புகழேந்தியும் கூட்டாக சிறுமியை பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக கூறியதன் பேரில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து நம்மிடம் பேசிய ஒரு விசாரணை அலுவலர், "சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்த சாஹிதாபானு (22) இவரின் ஆண் நண்பராண மதன்குமாரின் கட்டாயத்தால் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
சாஹிதாவிற்கு உடல் நலம் சரியில்லாமல் போன நிலையில், தனது உறவினரின் மகளான 13 வயது சிறுமியை அழைத்து வந்து வீட்டு வேலைக்கு அமர்த்தியுள்ளார்.
மதனும் அவர் நண்பர்கள் சிலரும் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி உள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி, இதுகுறித்து தனது தாயிடம் தெரிவித்துள்ளார்.
சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் மேற்கொண்ட விசாரணையில், குற்றவாளிகளான மதன்(35), சாஹிதாபானு(22), சந்தியா(23), ஈஸ்வரி(18), கார்த்திக்(25), மகேஷ்வரி(29), வனிதா(35), பாலியல் தரகர்கள் செல்வி(50), விஜயா(45) என 8 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் கடந்த 12ஆம் தேதி கைது செய்தோம்" என்றார்.