தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

சாலை திருடர்கள் மூவர் கைது! - crime cases

திருப்பூர்: இருசக்கர வாகனத்தில் லிஃப்ட் கேட்பதுபோல் நடித்து 64 ஆயிரம் மதிப்பிலான நகை மற்றும் செல்போன் திருட்டில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்

Thieves arrested
திருடர்கள் மூவர் கைது

By

Published : Jan 23, 2021, 12:17 PM IST

திருப்பூர் அடுத்த பெருமாநல்லூரை சேர்ந்த மதியழகன் என்பவர் நகை அடகு நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிகிறார். இந்நிலையில் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், மருத்துவரை பார்ப்பதற்காக பெருமாநல்லூரில் இருந்து குன்னத்தூர் செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்

அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் இவரிடம் வண்டியில் செல்வதற்கு லிஃப்ட் கேட்பது போல் நிறுத்தியுள்ளனர். மதியழகன் இரு சக்கர வாகனத்தை நிறுத்தியதும், அவர்கள் மதியழகனை மிரட்டி அவர் அணிந்திருந்த ஒன்றரை பவுன் தங்க செயின், 14 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்ஃபோன் ஆகியவற்றை பறித்து சென்றுள்ளார்.

இது தொடர்பாக மதியழகன் பெருமாநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், குன்னத்தூர் பகுதியை சேர்ந்த தவசி, மதுரையை சேர்ந்த வாசிம்ராஜா, இம்ரான்கான் உசைன் ஆகிய மூவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 64 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நகை மற்றும் செல்ஃபோனை பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க: லாரிகளை சிறைபிடித்து விவசாயிகள் போராட்டம்

ABOUT THE AUTHOR

...view details