தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

ஆபாச பேட்டியளித்த பெண்ணையும் விசாரிக்க முடிவு! - யூடியூப் சேனல்

சென்னை: பெண்களிடம் ஆபாசமாக பேட்டி எடுத்த சென்னை டாக்ஸ் யூடியூப் சேனலின் 3 பேர் கைது செய்யப்பட்ட நிகழ்வில், பேட்டி கொடுத்த பெண்ணையும் விசாரிக்க காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

talks
talks

By

Published : Jan 13, 2021, 1:50 PM IST

சென்னை பெசண்ட் நகர் கடற்கரையில் சென்னை டாக்ஸ் என்ற யூடியூப் சேனலின் தொகுப்பாளர் பெண்களிடம் ஆபாசமாக பேட்டி எடுத்ததாகக் கூறி, அதன் உரிமையாளர் உட்பட மூவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில், அந்நிகழ்ச்சியில் பேட்டியளித்த பெண், இது தொடர்பாக தான் தான் காவல்துறையில் புகார் கொடுத்ததாகவும், பணம் கொடுத்து தன்னை பேச வைத்ததாகவும் மற்றொரு யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதனிடையே, காவல்நிலையத்தில் புகார் அளிக்காமலேயே அந்த பெண் தான் புகார் அளித்ததாக பொய்யான தகவலை பரப்பி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவ்விவகாரம் தொடர்பாக எந்தப்புகாரையும் அப்பெண் கொடுக்கவில்லை என்று சாஸ்திரி நகர் காவல்துறையினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். எனவே, அந்த பெண்ணுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க சாஸ்திரி நகர் காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க: குடும்ப தகராறு காரணமாக இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

ABOUT THE AUTHOR

...view details