தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

பெண் சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது! - Latest crime News

விழுப்புரம்: மரக்காணம் பகுதியை சேர்ந்த பெண் சாராய வியாபாரி ரூபாவதி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரூபாவதி

By

Published : Oct 9, 2019, 6:08 PM IST

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள மரக்காணம் பகுதியைச் சேர்ந்தவர் துரை. இவரது மனைவி ரூபாவதி. இவர் தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்பது, கள்ளச்சாராயம் கடத்துவது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் மீது மரக்காணம் காவல் நிலையத்தில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

எனவே, இவரது நடவடிக்கையை கட்டுப்படுத்தும் நோக்கில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரின் பரிந்துரையை ஏற்று, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் உத்தரவிட்டார். அதன் பேரில் ரூபாவதியை கைது செய்த காவல்துறையினர், அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இதையும் படிக்கலாமே: முதியவரைக் கடுமையாகத் தாக்கி வழிப்பறி செய்த மூன்று நபர்கள் - பதற வைக்கும் சிசிடிவி பதிவு

ABOUT THE AUTHOR

...view details