விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் காளியம்மன் கழுத்தில் இருந்த தாலியை அபேஸ் செய்த திருடனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மல்லபுரம் தெருவைச் சேர்ந்த காளிமுத்து, அந்த பகுதியில் உள்ள காளியம்மன் கோயிலின் தலைவராக 15 வருடமாக உள்ளார். இவர் வழக்கம் போல் கோயிலில் விளக்கேற்றச் சென்றபோது காளியம்மன் கழுத்திலிருந்த சுமார் 15 கிராம் எடையுள்ள தங்க தாலி மாயமானதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
இதனைத்தொடர்ந்து கோவிலின் பல்வேறு பகுதிகளில் தேடியும் கிடைக்காததால் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி குற்றவாளியை தேடிவந்தனர்.
சாமி தாலியையே திருடியவர் கைது! இந்நிலையில் பல்வேறு திருட்டு செயல்களில் ஈடுபட்டு வந்த தென்காசியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் தாலியை திருடியது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க...ஈ டிவி பாரத் செய்தி எதிரொலி: கருணை இல்லத்துக்கு கிடைத்த அரசின் கருணை!