இலஞ்சி தென்காசி-செங்கோட்டை செல்லும் பிரதான சாலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வளாகத்தில், ஏடிஎம் இயந்திரம் உள்ளது. இரவு நேர காவலர் இல்லாத இந்த ஏடிஎம் மையத்திற்குள், இன்று (செப்டம்பர் 8) அதிகாலை புகுந்த முகமூடி அணிந்த நபர், இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க பல்வேறு வழிகளில் முயன்றார். ஆனால், ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முடியாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார். இதனால் ஏடிஎம்மில் வைக்கப்பட்டிருந்த 5 லட்ச ரூபாய் கொள்ளை போகாமல் தப்பியது.
ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி - 4 மணி நேரத்தில் பிடிபட்ட கொள்ளையர் - ஏடிஎம்
தென்காசி: ஏடிஎம்-ஐ உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவரை நான்கு மணி நேரத்தில் குற்றாலம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இது குறித்து தகவலறிந்த குற்றாலம் காவல்துறையினர், உடனடியாக அங்கு சென்று கொள்ளையர் குறித்த விவரங்களை சேகரித்தனர். அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், அதே பகுதியைச் சேர்ந்த இசக்கி என்பவரின் மகன் முத்து என்பவர்தான், கொள்ளை நிகழ்வில் ஈடுபட்டது எனத் தெரியவந்தது. இதனையடுத்து மறைந்திருந்த முத்துவை பிடித்து விசாரித்ததில் குற்றத்தை அவர் ஒப்புக் கொண்டார். பின்னர் அவரை குற்றாலம் காவல்துறையினர் கைது செய்தனர்.
இதையும் படிங்க: பல்வேறு திருட்டில் ஈடுபட்ட 11 பேர் கைது - காவல்துறை அதிரடி