தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

ராஞ்சி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு: 12பேர் கைது! - 12 men in Jharkhand abduct girl at gunpoint, gangrape her in brick kiln

ராஞ்சி: ஜார்கண்ட் பல்கலைக்கழக மாணவி கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கில், 12 பேர் கைது செய்ப்பட்டுள்ளனர்.

ராஞ்சி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு: 12பேர் கைது!
ராஞ்சி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு: 12பேர் கைது!

By

Published : Nov 28, 2019, 11:26 PM IST

கடந்த 26ஆம் தேதி ஜார்கண்ட் சட்ட பல்கலைக்கழக மாணவி தனது ஆண் நண்பருடன் சங்ஹிராமாப்பூர் கிராமத்தில் சாலையில் நின்றுள்ளார். அப்போது, அந்த பகுதிக்கு வந்த ஒரு சில இளைஞர்கள் அந்த பெண்ணை தூப்பாக்கியை காட்டி கடத்தி சென்று வன்புணர்வு செய்துள்ளனர்.

பின்னர் இது குறித்து பாதிக்கப்பட்ட அந்த பெண், ராஞ்சி காங்கே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை ராஞ்சி காவல் துறையினர் தேடி வந்தனர்.

இந்நிலையில் இன்று அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 12 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இதில் அவர்கள் வைத்திருந்த, கார், பைக், நாட்டு துப்பாக்கி உள்ளிடவற்றை கைப்பற்றி, அவர்களிடம் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க...சென்னை பிரபல ரவுடி செஞ்சியில் கைது

ABOUT THE AUTHOR

...view details