சென்னை வடபழனி ஆற்காடு சாலையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதால், அவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தை காவலர்கள் சோதனை செய்தனர். அதில் ஒன்றரை அடி நீளம் கொண்ட கத்தியை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
கத்தியுடன் பைக்கில் சுற்றிய நபர் - காவல்துறையினர் விசாரணை! - காவல்துறை
சென்னை: வடபழனியில் இருசக்கர வாகனத்தில் கத்தியுடன் சுற்றியவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
man
பின்னர் அந்த நபரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில், ஜமீன் பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த புவனேஷ்வர் என்பதும் காய்கறி, மரம் வெட்டும் தொழில் செய்வதால் கத்தி கொண்டு சென்றதாகவும் கூறியுள்ளார். தொடர்ந்து அவரிடம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: இருசக்கர வாகனங்களில் பெட்ரோல் திருடிய 4 பேர் கைது