தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

குடியிருப்புவாசிகளுடன் தகராறு; பெட்ரோல் பாம் வீசிய கல்லூரி மாணவர் - பல்லாவரத்தில் பரபரப்பு!

சென்னை: அடுக்குமாடி குடியிருப்பில் கல்லூரி மாணவர் ஒருவர் பெட்ரோல் பாம் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

bomb
bomb

By

Published : Aug 1, 2020, 11:46 AM IST

மீனம்பாக்கத்தை அடுத்த பழைய பல்லாவரத்தில் தனியாருக்குச் சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. அந்தக் குடியிருப்பில் விஜயகுமார் (25) என்பவர் தனியாக வீடு எடுத்து வாடகைக்கு தங்கியுள்ளார். அவர் அதேபகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பிசிஏ மூன்றாமாண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்றிரவு அடுக்குமாடி குடியிருப்பின் காவலரிடம், விஜயகுமார் தன்னுடைய நண்பர்களை உள்ளே அனுமதிக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு காவலாளி மறுக்கவே, அவருடன் தகராறு செய்துள்ளார். இதையடுத்து தகராறு முற்றி காவலாளியை விஜயகுமார் கடுமையாகத் தாக்குவதைப் பார்த்த குடியிருப்புவாசிகள், அவரை தடுத்து கண்டித்து அனுப்பினர்.

கல்லூரி மாணவர் விஜயகுமார்

கோபத்துடன் மாடியில் உள்ள தனது வீட்டிற்குள் சென்ற விஜயகுமார், மூன்று நெகிழிப்பைகளில் பெட்ரோலை நிரப்பி, அதில் ’ஆட்டோ பாம்’ என்ற பட்டாசை கொளுத்தி, மேலிருந்து கீழே வீசி வெடிக்கச் செய்துள்ளார். பயங்கர சத்தத்துடன் அது வெடித்தபோது, கீழே குழந்தைக்கு உணவு ஊட்டிக்கொண்டிருந்த பெண்ணும், குழந்தையும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.

இதையடுத்து குடியிருப்பில் இருக்கும் அனைவரும் அலறியடித்து வெளியே வந்தனர். இதுகுறித்து பல்லாவரம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். காவல் துறையினரை பார்த்ததும், விஜயகுமார் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். பின்னர், அவரது அறையில் 15க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை பறிமுதல் செய்த காவல் துறையினர், தப்பியோடிய விஜயகுமாரை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: யாசகம் கேட்ட தந்தையைக் கொலைசெய்த மகன்கள்!

ABOUT THE AUTHOR

...view details