மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாங்கரை, சின்னதடாகம், நஞ்சுண்டாபுரம், பன்னிமடை உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர்,உணவு தேடி அவ்வப்போது காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகள், விவசாய நிலங்களில் புகுவது வழக்கம்.
கோவையில் காட்டுயானை தூக்கி வீசி ஒருவர் படுகாயம்!
கோவை: நஞ்சுண்டாபுரம் பகுதியில் உலாவிய ஒற்றை காட்டுயானை, திடீரென ஒருவரை தாக்கிய தூக்கி வீசியதில் அவர் படுகாயமடைந்தார்.
இன்று (டிச.10) அதிகாலை சின்னதடாகம் அருகே உள்ள நஞ்சுண்டாபுரம் பகுதியில் உலாவிய ஒற்றை காட்டு யானை, திடீரென அவ்வழியே வந்த நந்தீஸ்வரன் என்பவரை தாக்கி துதிக்கையால் தூக்கி வீசியுள்ளது. இதில் அவரது தோல்பட்டை கிளிந்து அவர் படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் சத்தம் போட்டதால் காட்டு யானை அங்கிருந்து சென்றது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், ஒன்றை காட்டு யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டினர். நந்தீஸ்வரன் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.