தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

வீடு தரைமட்டமானது... பெண் மரணம்! வீடு கட்டிக் கொடுத்ததாக பணத்தை உண்டு ஏப்பம் விட்ட அரசு அலுவலர்கள்! - திருப்பத்தூர் மழை

அய்யம்மாளுக்கு பிரதம மந்திரி திட்டத்தின் கீழ் வீடு கட்டிக் கொடுக்க ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் மூலமாக ஏற்பாடுகள் செய்து தருவதாகக் கூறி, அவர்களிடம் ஆதார் அட்டை, பொது விநியோக அட்டை உள்ளிட்டவற்றை வாங்கியுள்ளனர். வீடு கட்டிக் கொடுத்ததாகவும் கணக்கு காட்டப்பட்டுள்ளது. இச்சூழலில் வீடு இடிந்து மனநலம் பாதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார்.

vaniyambadi aiyammal
vaniyambadi aiyammal

By

Published : Jul 10, 2020, 11:17 AM IST

திருப்பத்தூர்: மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வீடு கட்டிக் கொடுத்ததாக அரசு அலுவலர்கள் பொய் கணக்கு காட்டிய நிலையில், அவர் இருந்த குடிசை வீடு இன்று பெய்த மழையில் இடிந்துள்ளது. இதில் அய்யம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள புருஷோத்தம் குப்பம் பகுதியில் சுப்பிரமணி மனைவி அய்யம்மாள் வசித்து வந்தார். இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் ஆவார். இவருடைய மகன் ராகுல் காந்தி எட்டாம் வகுப்புப் படித்து வருகிறார்.

பெண்களிடம் தொடர் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்ட போலீஸ்... கட்டாய ஓய்வு கொடுத்த காவல் துறை!

அய்யம்மாளுக்கு பிரதம மந்திரி திட்டத்தின் கீழ் வீடு கட்டிக் கொடுப்பதாக ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் மூலமாக ஏற்பாடுகள் செய்து தருவதாகக் கூறி, அவர்களிடம் ஆதார் அட்டை, பொது விநியோக அட்டை உள்ளிட்டவற்றை வாங்கியுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள ஊர் பொதுமக்களும், உறவினர்களும்

இதனையடுத்து வீடு கட்டி முடிக்கப்பட்டது என ஏமாற்றி ஒரு லட்சதது 70 ஆயிரம் ரூபாய் கையாடல் செய்து முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். இச்சுழலில் பாழடைந்த வீட்டில் மனநலம் பாதிக்கப்பட்ட அய்யம்மாள் தங்கி இருந்தார்.

வாகனத் தணிக்கையில் ஏற்பட்ட மோதல்... உயிரை மாய்த்துக்கொண்ட திருநங்கை!

இவ்வேளையில் பெய்த மழையின் காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தற்பொழுது அவரது சடலத்தை எடுக்க விடாமல் அலுவலர்களிடம் உறவினர்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details