வேலூர் மாவட்டம் காட்பாடி தாராபடவேடு பகுதியில் உள்ள ஸ்ரீவரதராஜ பெருமாள் ஆலயத்தில் இன்று (அக். 26) விடியற்காலை அடையாளம் தெரியாத ஒருவர் கோயிலில் உள்ள உண்டியலை உடைத்து பணத்தை திருடிக்கொண்டிருந்தார்.
இதனைக் கண்ட சிலர் அப்பகுதி மக்களின் உதவியோடு திருடிய நபரைப் பிடித்து கோயிலில் உள்ள தென்னை மரத்தில் கட்டிவைத்து அடித்து உதைத்தனர். பின்னர் காட்பாடி காவல் துறைக்குத் தகவல் கொடுத்து அந்த நபரை காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.