வேர்கிளம்பி அருகே செட்டிச்சார்விளை பகுதியை சேர்ந்தவர் சகாய ஆன்றனி(47). மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த இவர், திருவட்டார் ஊராட்சி ஒன்றிய 9ஆவது வார்டு கவுன்சிலராக உள்ளார். இவருக்கு சொந்தமாக இரும்புக்கடை ஒன்றும் உள்ளது.
ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் தாக்கப்பட்டார் இந்நிலையில் சகாய ஆன்றனி தன் கடையை பூட்டி விட்டு இருசக்கர வாகனத்தில் அருகில் உள்ள தன் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அருகிலுள்ள வாழைதோப்புக்குள் மறைந்திருந்த அடையாளம் தெரியாத கும்பல் பின்புறமாக சென்று சகாய ஆன்றனியில் தலையில் இரும்பு கம்பியால் தாக்கிவிட்டு தப்பி சென்றுள்ளது
இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் துடித்த அவரை அப்பகுதி வழியாக சென்றவர்கள் மீட்டு மார்த்தாண்டத்திலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்திலூள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
தற்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து திருவட்டார் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தாக்கிய கும்பலை வலைவீசி தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: மயான ஊழியர் கொலை - பெண் உள்பட 4 பேர் சிறையில் அடைப்பு