சென்னையை அடுத்த பொழிச்சலூர் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திர குமார்(34). இவர் பம்மல் பகுதியிலுள்ள கடைக்கு சென்றுவிட்டு வெளிவந்தபோது வெளியே நிறுத்திவிட்டுச் சென்ற இருசக்கர வாகனத்தை யாரோ திருடிச் சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த ராஜேந்திர குமார் சங்கர் நகர் காவல் நிலையத்திற்குச் சென்று தனது இருசக்கர வாகனத்தை காணவில்லை என்று புகார் அளித்துள்ளார்.
அப்புகாரின் அடிப்படையில் விரைந்து வந்த காவல் துறையினர் கடையிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்தபோது எதுவும் துப்பு துலங்காததால், இருச்சக்கர வாகனத்தை திருடிச் சென்ற அடையாளம் தெரியாத நபரை காவல் துறையினர் வலைவீசி தேடி வந்தனர். இச்சூழலில் சங்கர் நகர் காவல் துறையினர் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, சந்தேகத்திற்கு இடமாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை நிறுத்தி விசாரித்துள்ளனர்.