சென்னை கோடம்பாக்கம் வரதராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் சம்பத் (50). பெயிண்டரான இவர் இன்று ராயபேட்டை அதிமுக அலுவலகம் எதிரே உள்ள கட்டடத்தின் இரண்டாவது மாடியில் ஏறி பெயிண்ட் அடித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் தவறி கீழே விழுந்துள்ளார். சத்தம் கேட்டு அருகிலிருந்த சக தொழிலாளர்கள் ஓடி வந்தனர். ஆனால், தலையில் பலத்த அடிப்பட்ட பிரகாஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பெயிண்ட் அடிக்கும்போது தவறி விழுந்தவர் நிகழ்விடத்திலேயே உயிரிழப்பு! - பெயிண்டர் பலி
சென்னை: அதிமுக அலுவலகம் எதிரே உள்ள கட்டடத்தில் பெயிண்ட் அடிக்கும்போது தவறி விழுந்து பெயிண்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
death
தகவல் அறிந்து அங்கு வந்த ராயப்பேட்டை காவல் துறையினர் பிரகாஷ் சம்பத்தின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: கணவன் திருநங்கையாக மாறியதால் மனைவி தீக்குளிக்க முயற்சி!