சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் பகுதியில் குடும்பத்துடன் வசிப்பவர் சரவணன். இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் நேற்றிரவு சரவணன் அவரின் வீட்டின் கதவு உள் தாழ்ப்பாள் போடாமல் தூங்கியுள்ளனர். அப்போது, நள்ளிரவு இரண்டு மணியளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வீட்டின் உள்ளே சென்று பீரோவின் சாவியை எடுத்து பீரோவிலிருந்து எட்டு சவரன் நகை, பத்து ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து வெளியே வந்துள்ளார்.
அப்போது சரவணன் வீட்டில் வளர்க்கும் நாய் ஒன்று அந்த நபரைப் பார்த்து குறைத்தது. நாய் குரைத்த உடன் நபர் அங்கிருந்து ஓட முயன்றுள்ளார்.
நாய் குரைத்த சத்தம் கேட்டு எழுந்த சரவணன், அவரது குடும்பத்தினர் வீட்டில் இருந்து யாரோ ஒருவர் ஓடுவதை கண்டனர். உடனே சரவணன் அவரை விரட்டி பிடித்துள்ளார்.
பூட்டப் படாத வீடு... திருடனை விரட்டி பிடித்த வீட்டின் உரிமையாளர் - Robbery
சென்னை: இரவு நேரத்தில் பூட்டப்படாமல் இருந்த வீட்டின் உள்ளே சென்று நகை, பணத்தை திருடிய நபர் கைது செய்யப்பட்டார்.
அப்போது அந்த நபரின் கையில் தனது வீட்டில் பீரோவில் வைத்திருந்த எட்டு சவரன் நகை, பத்து ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து அவரிடம் இருந்து நகையும், பணத்தையும் சரவணன் பெற்றுக்கொண்டு அந்த நபரை சேலையூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் பெயர் இளையபெருமாள் என்றும் லாரி ஓட்டுநராக வேலை செய்கிறார் என்றும்தெரியவந்தது.
இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்த காவலர்கள், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: 'என்றும் நிற்காத ஊசி கரோனாவால் நின்றது' - கலங்கிய தையல்காரர்