டெல்லி: கடந்தாண்டு 27 ஆயிரத்து 987 ரயில்வே விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதில் 76.3 விழுக்காடு விபத்துகள் ரயில்வே தண்டவாளங்களில் நிகழ்ந்துள்ளன என்று தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளிவிவர தகவல்கள் கூறுகின்றன.
மேலும் இந்த விபத்துகளில் கடந்தாண்டு 24 ஆயிரத்து 619 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் ரயில்களில் இருந்து விழுவது அல்லது ரயில்வே பாதையில் சென்ற நபர் மீது மோதல் என 21 ஆயிரத்து 361 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.
ரயில்வே விபத்துகள் அதிகம் நிகழ்ந்த மாநிலங்கள் பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. அங்கு ஆறு ஆயிரத்து 388 வழக்குகள் பதிவாகியுள்ளன. அதற்கு அடுத்த இடத்தில் உத்தரப் பிரதேசம் உள்ளது.