தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 18, 2020, 9:34 PM IST

ETV Bharat / jagte-raho

தமிழ்நாடு - கேரள எல்லையில் ரூ.50 லட்சம் சாராயம் பறிமுதல்!

திருவனந்தபுரம்: கேரள கலால் அதிகாரிகளால் ரூ.50 லட்சம் மதிப்புள்ள 15 ஆயிரத்து 750 லிட்டர் சாராயம் தமிழ்நாடு எல்லைப்பகுதியில் பறிமுதல் செய்யப்பட்டது.

Over 15,000 litres of spirit seized by Kerala excise
Over 15,000 litres of spirit seized by Kerala excise

தமிழ்நாடு - கேரள எல்லைப் பகுதியான சின்னக்கண்ணூரில் பெருமளவு சாராயம் பதுக்கி வைத்திருப்பதாக, கேரள கலால் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் பேரில் அதிகாரிகள், வெள்ளிக்கிழமை நள்ளிரவு சம்மந்தப்பட்ட பகுதிகளில் சோதனை நடத்தினர்.
அப்போது அங்குள்ள குடோன் ஒன்றில் 450 பிளாஸ்டிக் கேன்களில் சாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரிகள் சாராயத்தை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட 15 ஆயிரத்து 750 லிட்டர் சாராயத்தின் மதிப்பு ரூ.50 லட்சம் ஆகும்.

இந்த சாராய கேன்கள் தமிழ்நாடு காவலர்களிடம் பின்னர் ஒப்படைக்கப்பட்டது என கேரள கலால் செய்திக்குறிப்புகள் தெரிவிக்கின்றன. கடந்த மாதம் தமிழ்நாட்டில் பத்தாயிரம் (10,000) லிட்டம் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில் கேரள கலால் அதிகாரிகளால், தமிழ்நாடு-கேரள எல்லையில் 15 ஆயிரம் லிட்டம் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க : 2 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

ABOUT THE AUTHOR

...view details