ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கோட்டுவீராம்பாளையம் பகுதியில் மூன்று நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சத்தியமங்கலம் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகப்படும்படி சுற்றிக்கொண்டிருந்த இளைஞரை காவல் துறையினர் பிடித்து சோதனையிட்டனர். அவரிடமிருந்து ஆன்லைன் லாட்டரி சீட்டுகள், மூன்று கால்குலேட்டர்கள் மற்றும் ஒரு செல்ஃபோன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: 3 பெண் குழந்தைகளைக் கொன்றுவிட்டு பெற்றோர் தற்கொலை: பணத்தாசையால் நேர்ந்த கொடூரம்!
விசாரணையில் கோட்டுவீராம்பாளையத்தைச் சேர்ந்த ஜூபேர் (வயது 21) என்பவர் தான் இந்த செயலில் ஈடுபட்டுவந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இதையும் படிங்க: மதுரை அருகே ஆன்லைனில் லாட்டரி விற்பனை - ஐந்து பேர் கைது
சில தினங்களுக்கு முன்னர் ஆன்லைன் லாட்டரி சீட்டு கொடுமையால் ஒரு குடும்பமே தற்கொலை செய்துகொண்ட நிலையில், தற்போது தமிழ்நாடு முழுவதும் லாட்டரி வியாபாரிகளைக் கைது செய்யும் முயற்சியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: லாட்டரியால் சீரழிந்த குடும்பம் - 5 பேர் தற்கொலை..