தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

பெண்களை ஆசைக்கு இணங்க வைத்து ஏமாற்றிய காசி மீது கூடுதல் வழக்கு! - காசி வழக்கு

நாகர்கோவிலை சேர்ந்த பிரபல காதல் மன்னன் காசி மீது சென்னையைச் சேர்ந்த பெண் புதிதாக பாலியல் புகாரளித்துள்ளார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி காவல் துறையினர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர்.

one more case filed against nagercoil kasi
one more case filed against nagercoil kasi

By

Published : Nov 7, 2020, 1:53 PM IST

கன்னியாகுமரி:பெண்களை ஏமாற்றி பாலியல் வன்புணர்வு செய்து குண்டர் சட்டத்தில் கைதாகி சிறையிலுள்ள காசிமீது மேலும் ஒரு பெண் பாலியல் புகாரளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலை அடுத்த கணேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் காசி. இவர் சமூக வலைதளங்கள் மூலம் பெண்களை ஏமாற்றி, பாலியல் வன்புணர்வு செய்து வந்துள்ளார். இது தொடர்பாக சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் இவர் மீது புகார் அளித்தபோது தான், காசி அரங்கேற்றிய காதல் நாடகங்கள் வெளிச்சத்துக்கு வந்தது. தற்போது அவர் மீது மேலும் ஒரு பெண் பாலியல் புகாரளித்துள்ளார்.

குற்றவாளி காசி

முன்னதாக பெண் மருத்துவர் இவர் மீது புகாரளித்ததன் தொடர்சியாக, 6 பேர் காசி மீது காவல் துறையினரிடம் புகாரளித்தனர். இதையடுத்து காசி குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கு சிபிசிஐடிகாவல் துறையிக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் காசியின் இரண்டு நண்பர்களும் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

தற்போது புதிதாக பெண்ணொருவர் அளித்துள்ள பாலியல் புகாரை விசாரிக்க, காசியை பத்து நாள் காவலில் எடுக்க நாகர்கோவில் நீதிமன்றத்தில், சிபிசிஐடி காவல் துறையினர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details