இந்தச் சம்பவம் தென்கிழக்கு டெல்லியில் உள்ள நியூ பிரண்ட்ஸ் காலனி அருகே 24 மணி நேரமும் செயல்படும் மருந்தகத்தில் நடந்துள்ளது. இன்று அதிகாலை திடீரென்று கடையின் உள்ளே நுழைந்த மூன்று கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில் மருந்துக் கடை ஊழியரை மிரட்டி பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
துப்பாக்கி முனையில் ஒரு லட்ச ரூபாய் கொள்ளை! - கொள்ளை
டெல்லி: டெல்லியில் உள்ள மருந்துக் கடையில் துப்பாக்கி முனையில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தை பட்டப்பகலில் அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடிக்கப்பட்டது.
துப்பாக்கி முனையில்
இரண்டு நாட்களுக்கு முன்னர் இதே போன்ற கொள்ளைச் சம்பவம் மாடல் டவுன் என்ற இடத்திலும் நடந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த கொள்ளை சம்பவம் குறித்துக் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.