தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

கஞ்சா விற்பனை மோதல் - ஒருவருக்கு வெட்டு - ரவுடிகள் மோதல்

சென்னை: கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்டதால் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

case
case

By

Published : Sep 28, 2020, 1:17 PM IST

புது வண்ணாரப்பேட்டையின் அண்ணா நகர் பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மகேஷ் என்பவர் கஞ்சா விற்பனை செய்துள்ளார். இதனைக் கண்டித்த அப்பகுதி மக்கள், மகேஷை எச்சரித்துள்ளனர். அப்போது அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மகேஷ், பின்னர் ரவுடி விச்சு உட்பட 10க்கும் மேற்பட்டோரை அங்கு அழைத்து வந்து பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டியுள்ளார்.

இதை அறிந்த எதிர் கோஷ்டிகளான காசிமேட்டைச் சேர்ந்த கிஷோர் (26), விஷால் (27), சரத்குமார், விக்கி, வசந்தகுமார் உட்பட 8 பேர், வ.உ.சி நகருக்குச் சென்று மகேஷின் கூட்டாளிகள் நான்கு பேரை கத்தியால் வெட்டியுள்ளனர். தொடர்ந்து, நேற்று காலையும், தண்டையார்பேட்டையை சேர்ந்த தனுஷ் (19) என்பவரை, வ.உ.சி நகர் பகுதியில் கத்தியுடன் நின்றிருந்த 10 பேர் அழைத்துச் சென்று கை, கால்களில் வெட்டியுள்ளனர். பின்னர் அவர்களிடம் இருந்து தனுஷ் தப்பித்து வந்துள்ளார்.

ரத்த காயங்களுடன் வந்த தனுஷை கண்ட அப்பகுதியினர், உடனே இது குறித்து புது வண்ணாரப்பேட்டை காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். நிகழ்விடத்திற்கு விரைந்த காவலர்கள் தனுஷை வெட்டிய திருவொற்றியூரை சேர்ந்த கிஷோர் (25) என்பவரை கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள அப்பு, கெயில் பார்த்திபன், சபீர், சுபாஷ் உள்ளிட்டோரை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: கோயில் உண்டியலை உடைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது!

ABOUT THE AUTHOR

...view details