தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

தூத்துக்குடியில் 1,250 கிராம் கஞ்சா, ரூ.81ஆயிரம் பறிமுதல் - ஒருவர் கைது! - தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் ஒருவர் கைது

தூத்துக்குடி: சட்டவிரோதமாக கஞ்சா விற்றவரை காவல்துறையினர் கைது செய்து, அவரிடமிருந்த கஞ்சா மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.

கஞ்சா வழக்கில் ஒருவர் கைது

By

Published : Oct 12, 2019, 8:19 PM IST

தூத்துக்குடி வடபாகம் நிலைய உதவி ஆய்வாளர் ரவிக்குமார் தலைமையிலான போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது தூத்துக்குடி 1ஆம் கேட் அருகிலுள்ள பேட்டரிக் சர்ச் பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகப்படும்படியாக நின்றுக்கொண்டிருந்த தூத்துக்குடி, முகமது சதாலிபுரத்தைச் சேர்ந்த சங்கர குற்றாலம் (48) என்பவரைப் பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில் அவர், சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் அருள் வழக்குப்பதிவு செய்து, சங்கரகுற்றாலத்தைக் கைது செய்தார்.

மேலும், அவரிடமிருந்து ஒரு கிலோ 250 கிராம் கஞ்சாவும், 81 ஆயிரம் பணத்தையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details