தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

அம்மா மருந்தகத்தில் கொள்ளை அடித்த முதியவர் கைது! - பூட்டை உடைத்து

அம்மா மருந்தகத்தின் பூட்டை உடைத்து 64 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்த முதியவரை காவலர்கள் கைது செய்தனர்.

old-man-arrest
old-man-arrest

By

Published : Oct 9, 2020, 8:57 PM IST

விருதுநகர்:ஸ்ரீவில்லிபுத்தூர் வடக்கு ரத வீதியில் அம்மா மருந்தகம் செயல்பட்டு வருகிறது. நேற்றிரவு, ஸ்ரீவில்லிபுத்தூர் நகர குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்கம்போல அந்த பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இன்று (அக்.9) அதிகாலையில், சந்தேகத்திற்கிடமான வகையில் சைக்கிளில் மூட்டையுடன் முதியவர் ஒருவர் வந்ததைப் பார்த்து, அவரிடம் விசாரணை நடத்தினர். முதியவரின் முன்னுக்குப்பின் முரணான பதிலால் சந்தேகம் அடைந்த காவலர்கள், தொடர்ந்து விசாரணை செய்ததில், அம்முதியவர், வடக்கு ரத வீதியில் உள்ள அம்மா மருந்தகத்தில் பூட்டை உடைத்து கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து பணம் மற்றும் மருந்துகளை மூட்டையாகக் கட்டிக் கொண்டு வந்தது தெரிய வந்தது.

மீட்கப்பட்ட மருந்து பொருட்கள்

கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட முதியவர் நெல்லை பகுதியைச் சேர்ந்த ஷேக் மிதார் (62) என்பது தெரிய வந்தது. அவரிடமிருந்து, ரூ.64 ஆயிரம் பணம், மருந்து பொருட்களை பறிமுதல் செய்த காவலர்கள், வேறு திருட்டு சம்பவங்களில் அம்முதியவர் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க :திமுக மீது பொய் வழக்குகள் : உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய செந்தில் பாலாஜி!

ABOUT THE AUTHOR

...view details