பெர்காம்பூர் (ஒடிசா): பெர்காம்பூரை சேர்ந்த தொழிலதிபர் வீட்டில் திருடுபோன தங்க நகைகள் உள்பட 6.5 கிலோ தங்க ஆபரணங்கள், ரூ.4.44 லட்சத்துக்கும் அதிகமான ரொக்கம் புதன்கிழமை (நவ11) பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் முதன்மை குற்றவாளியாக கருதப்படும் கன்ஷ்யம் பெஹெரா என்ற கலீஃபா (30) என்ற இளைஞரை காவலர்கள் கைது செய்துள்ளனர்.
இது குறித்து காவலர்கள் அளித்துள்ள தகவலின்படி, “கன்ஜம் மாவட்டம் புருஷோத்தம்பூர் பகுதியில் உள்ள சுரேந்திர குமார் நாயக் (52) என்பவரது வீட்டில் அக்டோபர் 12-13ஆம் தேதி நள்ளிரவில் தங்க நகைகள் திருடப்பட்டன. வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற திருடர்கள், ஒரு கோடிக்கும் அதிக மதிப்பிலான தங்க நகைகளை திருடினார்கள்.
ஒடிசாவில் 6.5 கிலோ திருட்டு தங்க நகைகள் பறிமுதல் இது குறித்து சுரேந்திர குமார் நாயக் அளித்த புகாரின் அடிப்படையில், தென்சரக டிஐஜி சத்யபிரதா போய் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடிவந்தார். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இந்நிலையில் இந்தத் திருட்டு சம்பவத்தில் மூளையாக செயல்பட்டவரை காவலர்கள் கைதுசெய்தனர்.
அதன் பின்னர் இந்தச் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து 6.501 கிராம் தங்க ஆபரணங்கள், ரூ.4 லட்சத்து 44 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஒடிசாவில் 6.5 கிலோ திருட்டு தங்க நகைகள் பறிமுதல் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பாதியில் நின்ற மின்சாரம்; செல்போன் ஒளியில் பிரசவம் பார்த்த மருத்துவர்!