கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 52). இவர் இந்திய வானியல் ஆராய்ச்சி மையமான ஐ.எஸ்.ஆர்.ஓ.வின் தேசிய தொலைநிலை மையத்தில் விஞ்ஞானியாக பணிபுரிந்து வந்தார். இவர், ஹைதராபாத் நகரில், அமா்பேட் பகுதியில் உள்ள அன்னப்பூா்ணா குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று அவர் பணிக்கு வரவில்லை. இதையடுத்து சக விஞ்ஞானிகள் அவரை செல்ஃபோனில் தொடா்பு கொண்டுள்ளனர்.
ஹைதராபாத்தில் விஞ்ஞானி படுகொலை... நடந்தது என்ன? - கேரள விஞ்ஞானி சுரேஷ்
ஹைதராபாத்தில் ஐஎஸ்ஆர்ஓ விஞ்ஞானி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
![ஹைதராபாத்தில் விஞ்ஞானி படுகொலை... நடந்தது என்ன?](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4621863-thumbnail-3x2-murder.jpg)
எனினும் ஃபோன் எடுக்கப்படாததால் சென்னையில் உள்ள வங்கியில் பணிபுரிந்து வரும் அவரது மனைவி இந்நிராவுக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த இந்திரா, இதுகுறித்து தனது உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து தனது உறவினர்களுடன் இந்திரா ஹைதராபாத் வந்தார். இதற்கிடையே காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் உறவினர்கள் முன்னிலையில் காவல் துறையினர், சுரேஷ் தங்கியிருந்த வீட்டின் கதவை உடைத்தனர். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது, படுக்கையறையில் சுரேஷ் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தார்.