திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசி காவல் எல்லைக்கு உட்பட்ட அவிநாசிலிங்கம்பாளையம் புறவழிச்சாலை அருகே மின்மாற்றி ஒன்று உள்ளது. அதில் இளைஞர் ஒருவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்து கிடப்பதாக அவிநாசி காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல்துறையினர், ஆய்வு செய்து, மின்மாற்றியில் சிக்கி உயிரிழந்து கிடந்த இளைஞரின் உடலை மீட்டு அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இறந்தவர், ஜார்கண்ட் மாநிலம் தனியாபாத் பகுதியை சேர்ந்த கே. லட்சுமணன் சிங் (28) என்பதும், கோவை சூலூர் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் தங்கி பணிபுரிந்து வந்ததும் தெரிய வந்தது.