தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

ஐ.எஸ்.ஐ.எஸ். உடன் தொடர்பு: 5 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

அரசுக்கு எதிராக அதிருப்தியை உருவாக்க சதி செய்ததற்காகவும், பல்வேறு மத சமூகங்களிடையே பகைமையை ஊக்குவித்ததற்காகவும், மோசமான நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காகவும் ஐவர் மீது தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்பு
ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்பு

By

Published : Sep 3, 2020, 8:28 AM IST

ஸ்ரீநகர்: தடைசெய்யப்பட்ட இஸ்லாமிக் ஸ்டேட் கோரசன் புரோவின்ஸ் (ஐ.எஸ்.கே.பி) உடன் தொடர்புவைத்ததாக ஐந்து பேர் மீது தேசிய புலனாய்வு முகமை குற்றப்பத்திரிகை தாக்கல்செய்துள்ளதாக அதன் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

காஷ்மீரைச் சேர்ந்த ஒரு பெண் உள்பட ஐந்து பேர் மீது டெல்லி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யப்பட்டுள்ளது என்று தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது.

இவர்கள் டெல்லியில் வசிக்கும் ஜஹான்சைப் சாமி, காஷ்மீர் பெண் ஹினா பஷீர், ஹைதராபாத்தைச் சேர்ந்த அப்துல்லா பாசித், புனேவைச் சேர்ந்த இரண்டு நபர்களான சாதியா அன்வர் ஷேக், நபீல் சித்திக் காத்ரி ஆகியோர் ஆவர்.

குற்றஞ்சாட்டப்பட்ட அனைவருமே தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ். / ஐ.எஸ்.கே.பி. உடன் இணைந்ததற்காகவும், அரசுக்கு எதிராக அதிருப்தியை உருவாக்க சதிசெய்ததற்காகவும், பல்வேறு மத சமூகங்களிடையே பகைமையை ஊக்குவித்ததற்காகவும், மோசமான நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காகவும் குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யப்பட்டுள்ளதாக அலுவலர்கள் கூறியுள்ளனர்.

இந்திய தண்டனைச் சட்டம், சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின்கீழ் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சாவ் அல்-ஹிந்தின் (வாய்ஸ் ஆஃப் இந்தியா) என்னும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் மாதாந்திர நாளிதழின் பிப்ரவரி பதிப்பை வெளியிட்டதற்காக, சாமியையும், அவரது மனைவி ஹினாவையும் மார்ச் 8ஆம் தேதியே, தெற்கு டெல்லியின் ஜாமியா நகரில் வைத்து காவல் துறையினர் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details