கேரள தங்கக் கடத்தல் வழக்கு: நகைப் பட்டறை உரிமையாளர் வீட்டில் என்.ஐ.ஏ சோதனை! - கேரள தங்க நகைக் கடத்தல் வழக்கு

09:36 September 09
கோயம்புத்தூர்:கேரள தங்க நகை கடத்தல் தொடர்பான ஆதாரங்களை சேகரிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கும் தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள், இன்று (செப்., 9) கோயம்புத்தூரில் உள்ள நகைப் பட்டறை உரிமையாளர் இல்லத்தில் தீவிர சோதனை நடத்திவருகின்றனர்.
கோவை தேர்முட்டி பகுதி பவிழம் வீதியில் உள்ள நகைப் பட்டறை உரிமையாளரான நந்தகுமார் என்பவரது இல்லத்தில் (தரைத்தளத்தில் பட்டறை; மாடியில் இல்லம்) காலை 6 மணி முதல் சோதனை நடைபெற்று வருகிறது. முதற்கட்ட சோதனையில் 38 சவரன் நகையும், 2.75 லட்ச ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.