தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

சாதுக்கள் கொலை: டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்பியது மனித உரிமைகள் ஆணையம்! - மனித உரிமைகள் ஆணையம்

மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தது தொடர்பாக, அந்த மாநில காவல்துறை தலைவருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

சாதுக்கள் கொலை
மனித உரிமைகள் ஆணையம்

By

Published : Apr 22, 2020, 8:17 PM IST

மும்பை: பால்கர் மாவட்டத்தில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவத்தில் சாதுக்கள் கொலை செய்யப்பட்டது தொடா்பாக, அந்த மாநில காவல்துறை தலைவருக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

இது குறித்து அந்த ஆணையம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்;

பால்கர் வன்முறைச் சம்பவம் குறித்த புகாரின்பேரில் மாநில காவல்துறை தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் வன்முறைச் சம்பவத்தில் தொடா்புடைய குற்றவாளிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், அந்தச் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டிருந்தால், அது குறித்தும் 4 வாரங்களில் பதிலளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய் விலை சரிவை சாதகமாக பயன்படுத்துமா இந்தியா?

மாவட்ட நிர்வாகம், காவல் துறையினரின் கூடுதல் கண்காணிப்பில் தேசிய ஊரடங்கு அமலில் உள்ள சூழலில், கட்டுக்கடங்காத கும்பலால் மூன்று போ் கொடூரமான முறையில் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அரசு ஊழியா்களின் அலட்சியத்தையே சுட்டிக்காட்டுகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மகாராஷ்டிரா மாநிலம் காண்டிவலியைச் சோ்ந்த சிக்னே மகாராஜ் (70), சுஷில்கிரி மகாராஜ் (35) ஆகியோா் ஏப்ரல் 16ஆம் தேதி இறுதிச் சடங்கு நிகழ்வில் பங்கேற்பதற்காக குஜராத் மாநிலம் சூரத் நகருக்கு புறப்பட்டனர். பால்கர் மாவட்டத்தில் உள்ள கட்சிந்தலி கிராமம் வழியாக அவர்களின் வாகனம் சென்றபோது, அதனை கிராமவாசிகள் சிலர் வழிமறித்தனர்.

லாக்டவுன் கடைபிடிக்காத மக்கள் மீது வங்க காவல்துறை தடியடி

அதன் பின்னர் சிக்னே மகாராஜ், சுஷில்கிரி, ஓட்டுநர் நிலேஷ் டெல்கேட் (30) ஆகியோரை குழந்தை கடத்தல்காரர்கள் என்றெண்ணி, அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் மூவரும் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக மாநில காவல்துறை தலைவருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details