தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

ரூ 500 கோடி போதைப் பொருள் பறிமுதல்: சர்வதேச கும்பலுடன் தொடர்பு? - தூத்துக்குடி குற்றம்

தூத்துக்குடியில் கடல் பகுதியில் 500 கோடி மதிப்பிலான போதை பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்டவர்களுக்கு சர்வதேச கடத்தல் கும்பலுடன் தொடர்புள்ளதா என மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

tuticorin drugs, naval cops arrested suspects, suspects arrested with drugs in tuticorin, தூத்துக்குடி போதை பொருள் கடத்தல், 500 கோடி மதிப்பிலான போதை பொருள், ஹெராயின், தூத்துக்குடி குற்றம், tuticorin drug crime
tuticorin drug crime

By

Published : Nov 27, 2020, 1:16 PM IST

Updated : Nov 27, 2020, 1:21 PM IST

தூத்துக்குடி: ஹெராயின் போன்ற ரூ.500 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களுடன் ஆறு பேரை மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தூத்துக்குடி கடற்கரை பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவல் உள்ளதா, ஏதேனும் போதை பொருட்கள் கடத்தப்படுகிறதா என்பது குறித்து கடலோர காவல் படையினர் இரவு, பகலாக தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்தனர்.

தென் தமிழ்நாட்டை நெருங்கிய போதைப் படகு...

கன்னியாகுமரியில் இருந்து 10 நாட்டிக்கல் (18.52 கி.மீ) தொலைவில் இலங்கையைச் சேர்ந்த ஒரு படகு வந்தது. அந்த படகில் 6 பேர் இருந்தனர். இதனால் கடலோர காவல் படையினர் தீவிர சோதனை நடத்தினர். அப்போது, அந்த விசைப்படகில் படகில் உள்ள ஒரு காலி டீசல் டேங்கில், 99 போதைப் பொருள் பொட்டலங்கள் இருந்தன.

கடலில் நின்ற கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகு

அது குறித்து தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சுமார் 100 கிலோ ஹெராயின் போதை பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து நடத்திய தேடுதல் வேட்டையில் படகில் 20 சிறிய பெட்டிகளில் மறைத்து வைத்திருந்த கிறிஸ்டல் மெத்தம் பீட்டாமைன் எனும் போதை பொருள் இருந்தது. அதே போன்று 5 துப்பாக்கிகளையும் கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்தனர்.

கோடிக் கணக்கில் விலை போகும் போதைப் பொருட்கள்

இதன் மதிப்பு சுமார் 500 கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதே போன்று மெத்தலின் பீட்டாமைன் போதை பொருள் மேற்கத்திய நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. பறிமுதல் செய்யப்பட்ட இந்த போதை பொருளின் மதிப்பு ரூ.100 கோடி என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், துரையா வகை சேட்டிலைட் கைப்பேசியை கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்தனர்.

கைப்பற்றப்பட்ட போதை பொருள்

பிரீபெய்டு வகையைச் சேர்ந்த இந்த கைப்பேசி இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இலங்கையில் பயன்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இச்சூழலில், கடலோர காவல் படை ரோந்து கப்பல் இன்று காலை 7.30 மணியளவில் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு வந்தடைந்தது.

பல நாடுகளுடன் தொடர்பு...

தொடர்ந்து படகிலிருந்த 6 பேரையும் கடலோர காவல் படையினர், மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு தென்மண்டல இயக்குனர் புருனோ, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், ரா உளவுப் பிரிவு அலுவலர் சார்லஸ், மத்திய உளவுப் பிரிவு அலுவலர்கள் விசாரணை நடத்தினர்.

கைப்பற்றப்பட்ட படகு

விசாரணையில் அவர்கள் 6 பேரும் இலங்கை நீர்க்கொழும்பைச் சேர்ந்த ஜோசப் பர்னாந்து மகன் நீந்து குலசூரிய சாத்தமனுவேல் (40), ஜோசப் அந்தோணி மகன் வானகுல சூரியஜீவன்(30), நிமல் லயனல் மகன் சமீரா(32), ஜோசப் அந்தோணி மகன் வர்ணகுல சூர்யா, மனுவேல் ஜீவன் பிரசன்னா(29), சிறினே கமகே மகன் நிசாந்த் கமகே, அந்தோணி பர்னாந்து மகன் லட்சுமணகுமார்(37) என்பது தெரியவந்தது.

விசாரணையில் திட்டத்தை கக்கிய கடத்தல் கும்பல்

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், நீர்க்கொழும்பு பகுதியைச் சேர்ந்த ஒரு படகை இவர்கள் வாடகைக்கு எடுத்து, அங்கிருந்து போதை பொருட்களை வாங்குவதற்காக பாகிஸ்தான் கடல் பகுதிக்கு சென்றுள்ளனர். அதே நேரத்தில் ஈரானில் இருந்து பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் ஒரு பாய்மர படகில் போதை பொருளை ஏற்றி வந்து, நடுக்கடலில் வைத்து படகில் ஏற்றியுள்ளனர்.

தூத்துக்குடி போதை பொருள் கடத்தல்

அதன்பிறகு 6 பேரும் போதை பொருளை ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு சென்றுள்ளனர். இச்சூழலில், இந்திய கடல் அருகே வந்தபோது, எதிர்பாராத விதமாக படகின் ஒரு டீசல் டேங்கில் பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் டீசல் காலியானதால் மேற்கொண்டு படகை இயக்க முடியாமல் தவித்துள்ளனர். அப்போது காற்றின் வேகத்தால் படகு இந்திய கடல் பகுதிக்குள், அதாவது கன்னியாகுமரியில் இருந்து 10 நாட்டிக்கல் தொலைவுக்குள் வந்துள்ளது. அந்த சமயத்தில் கடலோர காவல் படையினரிடம் சிக்கியுள்ளனர் என்று தெரியவந்தது.

கிடுக்குப்பிடி விசாரணை...

இதைத் தொடர்ந்து கடலோர காவல் படையினர் கைது செய்யப்பட்ட 6 பேருடன், பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்களை மத்திய போதைபொருள் தடுப்பு பிரிவு அலுவலர்களிடம் ஒப்படைத்தனர். அதன்பிறகு போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலர்கள் 6 பேரையும் பகல் 12.30 மணிக்கு பழைய துறைமுகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

பின்பு மாலையில் அங்கிருந்து ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் மீது மதுரை மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தவுள்ளனர். மேலும், கைது செய்யப்பட்ட 6 பேரையும் தூத்துக்குடி நீதிமன்றத்தில் முன்னிறுத்திய பின்னர் மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Last Updated : Nov 27, 2020, 1:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details